/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வனம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாணவர்களுக்கு விழிப்புணர்வு
/
வனம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாணவர்களுக்கு விழிப்புணர்வு
வனம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாணவர்களுக்கு விழிப்புணர்வு
வனம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாணவர்களுக்கு விழிப்புணர்வு
ADDED : டிச 09, 2025 06:12 AM

கூடலுார்: கூடலுார் ஜீன்பூல் தாவர மையத்தில் நடந்த விழிப்புணர்வு முகாமில் வனம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கூடலுார் குங்கூர்மூலா அரசு மேல்நிலைப்பள்ளி, பசுமை பள்ளி திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்கள், ஜீன்பூல் சூழல் சுற்றுலா தாவரம் மையத்திற்கு இயற்கை சுற்றுலா அழைத்து சென்றனர்.
அங்கு, நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மைய மரக்காப்பாளர் கோமதி பேசுகையில், 'ஜீன்பூல் தாவர மையம் சுற்றுலா தளம் மட்டுமின்றி, இயற்கையை பாதுகாப்பதிலும் முக்கியத்துவம் வழங்கி வருகிறோம். தற்போது, 150 செடிகளுடன் மூலிகை தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. வனம் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாப்பது அனைவரின் கடமையாகும். இதில் மாணவர்களுக்கு அதிக பங்கு உள்ளது,'' என்றார். நிகழ்ச்சியில் வனக்காப்பாளர் தம்பா, பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து மாணவர்கள் அங்குள்ள இயற்கை சார்ந்த சுற்றுலா மையங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.