/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தேநீர் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும்; மாணவர்கள் மத்தியில் விழிப்பணர்வு
/
தேநீர் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும்; மாணவர்கள் மத்தியில் விழிப்பணர்வு
தேநீர் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும்; மாணவர்கள் மத்தியில் விழிப்பணர்வு
தேநீர் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும்; மாணவர்கள் மத்தியில் விழிப்பணர்வு
ADDED : மார் 31, 2025 09:37 PM

பந்தலுார்; பந்தலுார் அருகே அய்யன்கொல்லி ஸ்ரீ சரஸ்வதி விவேகானந்தா மஹா வித்யாலயா மெட்ரிக் பள்ளி வளாகத்தில், தேயிலை வாரியம் சார்பில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி துணை முதல்வர் ரேணுகா வரவேற்றார். முதல்வர் அன்பரசி தலைமை வகித்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
தேயிலை வாரிய உறுப்பினர் மனோஜ்குமார் பேசுகையில், ''நீலகிரி மாவட்டம் மட்டும் இன்றி உலகின் பல்வேறு இடங்களில் தேயிலை பயிரிடப்படுகிறது.
இந்த பகுதியில் அதிகளவில் சிறு விவசாயிகள் தேயிலை விவசாயத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தேயிலையில் மதிப்பு கூட்டு பொருட்களை உற்பத்தி செய்து, தரமான தேயிலை துாளை உற்பத்தி செய்யவும் தேயிலை வாரியம் முயற்சி மேற்கொண்டு உள்ளது.
தேநீர் மிகச்சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டுள்ளது. ஆனால், பொதுமக்கள் தரமான தேயிலை துாளை வாங்கி பயன்படுத்தினால் மட்டுமே இது சாத்தியமாகும்.
உடனடியாக நிறம் கிடைக்க வேண்டும், கூடுதலான சுவை வேண்டும் என்பதற்காக நிறங்கள் மற்றும் நச்சுப் பொருட்கள் கலந்து தேநீர் தயாரித்து பருகுவதால் எந்த பயனும் கிடைக்காது மாறாக நோய்கள் பரவும். எனவே, தரமான தேயிலை துாள் எது என்பதை சரி பார்த்து பயன்படுத்த வேண்டும்,'' என்றார்.
வளர்ச்சி அலுவலர் அஞ்சலி, உதவி இயக்குனர் திப்ய ஜோதிடட்டா ஆகியோர், 'தரமான தேயிலை துாள் தயாரிப்பது; தேயிலை துாளில் கலப்படங்கள் குறித்து தெரிந்து கொள்வது; எந்தெந்த காலநிலையில் தேயிலை நல்ல நிலையில் வளரும் மற்றும் இயற்கை முறையில் தேயிலை துாள் தயாரிப்பது எப்படி,' என்பது குறித்து விளக்கம் அளித்தனர்.
தொடர்ந்து, இயற்கை விவசாயி குமரன் தலைமையிலான விவசாய குழுவினர், இயற்கை விவசாயம் மேற்கொண்டது குறித்த ஆய்வு அறிக்கையினை வெளியிட்டு, இயற்கை விவசாயத்தில் உருவாக்கப்பட்ட தேயிலை துாள் குறித்த கண்காட்சியை நடத்தினர்.
மாணவர்களுக்கு தேயிலையின் குணங்கள் மற்றும் பயன்கள் குறித்த விளக்க கையேடு வழங்கப்பட்டது. வளர்ச்சி அலுவலர் வருண் மேனோன் நன்றி கூறினார்.

