/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
போதை பொருட்களை ஒழிக்க அரசு பள்ளியில் விழிப்புணர்வு
/
போதை பொருட்களை ஒழிக்க அரசு பள்ளியில் விழிப்புணர்வு
போதை பொருட்களை ஒழிக்க அரசு பள்ளியில் விழிப்புணர்வு
போதை பொருட்களை ஒழிக்க அரசு பள்ளியில் விழிப்புணர்வு
ADDED : ஆக 14, 2025 08:11 PM
கோத்தகிரி; கோத்தகிரி ஒரசோலை அரசு நடுநிலைப் பள்ளியில், போதையில்லா தமிழ்நாடு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் நஞ்சுண்டன் பேசுகையில், ''போதை பொருட்களால் சமூகம் சீரழிவதுடன், குடும்ப உறவுகள் பாதிக்கப்படுகிறது. போதை பொருட்களை பயன்படுத்துபவர்கள் உடல் உபாதைகளால் பல்வேறு இன்னல்களை சந்திக்க நேரிடுகிறது. ஒருவர் புகைப்பதன் மூலம், அருகில் உள்ளவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகின்றனர்.
எனவே, மாணவர்கள் பள்ளி பருவத்தில் போதை பழக்கத்திற்கு அடிமையாகாமல், பெற்றோர், உறவினர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கூடுமானவரை விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,'' என்றார்.
தொடர்ந்து, பட்டதாரி ஆசிரியர் பாலசுப்ரமணி போதை தடுப்பு உறுதிமொழி வாசிக்க, அனைவரும் எடுத்துக் கொண்டனர். பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் பெரியசாமி, ராஜகோபால், ஆசிரியைகள் சோனியா, கமலா மற்றும் சகுந்தலா உட்பட, மாணவர்கள் பங்கேற்றனர்.