/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நுகர்வோர் பாதுகாப்பு குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு
/
நுகர்வோர் பாதுகாப்பு குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு
நுகர்வோர் பாதுகாப்பு குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு
நுகர்வோர் பாதுகாப்பு குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு
ADDED : பிப் 16, 2025 11:12 PM
கூடலுார்,; கூடலுார் புத்துார்வயல் அரசு உயர் நிலை பள்ளியில், குடிமக்கள் நுகர்வோர் மன்ற கூட்டம் நடந்தது.
கூட்டத்தில், பள்ளி தலைமை ஆசிரியர் கண்ணன் தலைமை வகித்து பேசுகையில்,''நுகர்வோர் பாதுகாப்பு கு றித்து மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் போது, சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்,'' என்றார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய பொது செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசுகையில், ''சர்க்கரை, கொழுப்பு, உப்பு தன்மை அதிகமாக உள்ள உணவுகள் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அவைகளை தவிர்க்க வேண்டும். சிறுதானியங்கள், காய்கறிகள், கீரைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்,'' என்றார்.
'ஆல் தி சில்ட்ரன்' அமைப்பு ஒருங்கிணைப்பாளர் அஜித் பேசுகையில், ''உணவு பொருட்களின் உற்பத்தி மற்றும் காலவதி தேதியை பார்த்து வாங்க வேண்டும். டாக்டர்கள் ஆலோசனை இன்றி மருந்துகள் எடுத்துக் கொள்ள கூடாது,'' என்றார்.
கூட்டத்தில், நுகர்வோர் மன்ற பொறுப்பு ஆசிரியர் தங்க அருணா, தன்னார்வலர் அஜித் உள்ளிட்ட பங்கேற்றனர்.