ADDED : டிச 12, 2025 07:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோத்தகிரி: கோத்தகிரியில் பழங்குடியின மாணவர்களுக்காக நடத்தப்படும், விக்டோரியா ஆம்ஸ்ட்ராங் நினைவு மழலையர் மற்றும் தொடக்க பள்ளியில், சோலார் பேனல் வாயிலாக, சூரிய ஆற்றல் பெறுவது குறித்து, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
சென்னை பூமி அறக்கட்டளை தன்னார்வலர்கள் சோலுார் மின்விளக்குகளை தயாரிக்க செயல் முறை விளக்கம் அளித்ததுடன், அதன் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில், 'சூரிய ஆற்றலானது, வருங்கால உலகத்திற்கு மிகவும் முக்கியம் எனவும், மாணவர்களுக்கு நிலையான எரிசக்தி தீர்வுகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த நடைமுறைகளை ஊக்குவிக்க உதவும்,' என, தெரிவிக்கப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியை பூவிழி, ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

