/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கோக்கால் பழங்குடியின கிராமத்தில் 'வரசாவு' நிகழ்ச்சி; கோத்தர் மக்கள் திரளாக பங்கேற்று ஊர்வலம்

UPDATED : டிச 12, 2025 08:59 AM
ADDED : டிச 12, 2025 07:12 AM

ஊட்டி: ஊட்டி அருகே கோக்கால் பழங்குடியினர் கிராமத்தில் 'வரசாவு' சடங்கு நடந்தது.
ஊட்டி அருகே சோலுார் கோக்கால் பகுதியில் கோத்தர் பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். இரண்டாண்டுக்கு ஒரு முறை இப்பகுதியில், பாரம்பரிய 'வரசாவு' சடங்கு நடத்துகின்றனர்.
இதன்படி, இறந்தவர்களை எரித்த பின், அதில் மிஞ்சும் எலும்புகளை தனியாக எடுத்து வைத்து இறந்தவரின் பெயரை எழுதி பாதுகாப்பாக வைப்பது வழக்கமாக உள்ளது. இரண்டாண்டுக்கு ஒருமுறை இவர்களின் சம்பிரதாய சடங்குகள் செய்யப்பட்டு எலும்புகள் தீயிட்டு தீட்டு களையப்படுகிறது.
இந்நிலையில், நேற்று நடந்த சடங்கின் போது, அங்கு இறந்தவர்கள் விரும்பும் கீரை, வெல்லம், புகையிலை உட்பட பொருட்களை நாற்காலியில் வைத்து பூஜை செய்கின்றனர்.
பின்பு, அனைத்தையும் நாற்காலியில் வைத்து தீட்டு எரித்தனர். அதன்பின், ஆண்கள், பெண்கள் இணைந்து பாரம்பரிய நடனமாடினர். வரும் மூன்று நாட்களுக்கு கிராமத்தில் இந்த சடங்கு தொடர்பாக நிகழ்ச்சிகள் நடக்கிறது.