/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நீலகிரியில் ரூ.7.27 கோடியில் நலத்திட்ட உதவிகள்
/
நீலகிரியில் ரூ.7.27 கோடியில் நலத்திட்ட உதவிகள்
ADDED : டிச 12, 2025 07:11 AM
குன்னுார்: குன்னுார் அந்தோணியார் மேல்நிலை பள்ளியில், அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அரசு கொறடா ராமச்சந்திரன் பேசுகையில், ''அரசியலமைப்பு உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்த அம்பேத்கர், தீண்டாமை ஒழிப்பு மற்றும் பட்டியலின மக்களின் முன்னேற்றம், தாழ்த்தப்பட்ட மக்களின் அரசியல் உரிமை மற்றும் சமூக விடுதலைக்காக போராடினார்.
அவரின் நினைவு தினத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், பல்த்துறைகளின் நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதில், நீலகிரியில், 6,895 பேருக்கு, 7.27 கோடி ரூபாய் மதிப்பிலான நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன,'' என்றார். மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், கூடுதல் கலெக்டர் அபிலாஷா கவுர், நகராட்சி தலைவி சுசீலா, நகராட்சி திட்ட குழு உறுப்பினர் ராமசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

