/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மலை பாதையில் தொடரும் வாகன விபத்துகள்; விதிகளை பின்பற்ற விழிப்புணர்வு அவசியம்
/
மலை பாதையில் தொடரும் வாகன விபத்துகள்; விதிகளை பின்பற்ற விழிப்புணர்வு அவசியம்
மலை பாதையில் தொடரும் வாகன விபத்துகள்; விதிகளை பின்பற்ற விழிப்புணர்வு அவசியம்
மலை பாதையில் தொடரும் வாகன விபத்துகள்; விதிகளை பின்பற்ற விழிப்புணர்வு அவசியம்
ADDED : ஜன 16, 2024 11:23 PM
குன்னுார்:குன்னுார்- - மேட்டுப்பாளையம் மலை பாதையில் விபத்துக்கள் அதிகரித்து வருவதை குறைக்க, போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
ஊட்டிக்கு கோடை சீசன் காலங்களில் மட்டுமல்லாமல் சாதாரண நாட்களிலும் சுற்றுலா வாகனங்கள் அதிகளவில் வருகின்றன.
அதில், பயணிகளின் முக்கிய வழித்தடமான, குன்னுார்- -மேட்டுப்பாளையம் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதால், பெரும்பாலான வாகனங்கள் அதிவேகத்தில் இயக்கப்படுவதால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.
கடந்த, 2022 மார்ச், 8ம் தேதி பர்லியாரில் 'டெம்போ டிராவலர்' கவிழ்ந்ததில், 11 பேர் காயம் அடைந்தனர். செப்., 4ம் தேதி பர்லியாரில் சுற்றுலா பஸ் விபத்தில், ஸ்கூட்டியில் வந்த பெண் பலியானார். பலர் காயமடைந்தனர்.
கடந்த ஆண்டு, செப்., 30ம் தேதி மரப்பாலம் அருகே பள்ளத்தில் சுற்றுலா பஸ் கவிழ்ந்த விபத்தில், 9 பேர் பலியாகினர். இது போன்று அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.
சமூக ஆர்வலர் மனோகரன் கூறுகையில், ''சாலை அகலமான பின்னர்,மலை பாதையில் வாகனம் இயக்குவதில் போதிய அனுபவம் இல்லாத பல டிரைவர்கள் அதிவேகத்தில் செல்வது பெரும்பாலான விபத்துக்கு காரணமாகி விடுகிறது. எனவே, தொடர் விபத்துகள் நடப்பதை குறைக்க நெடுஞ்சாலை துறையினர் மற்றும் போலீசார், வாகன டிரைவர்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்,'' என்றார்.

