/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அரசு பள்ளி மாணவியருக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
அரசு பள்ளி மாணவியருக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : ஜன 20, 2024 02:10 AM
கூடலுார்;கூடலுார் புளியாம்பாறை அரசு உயர்நிலை பள்ளியில் 'அக்னிசிறகுகள்' அமைப்பு சார்பில் 'மாதவிடாய் தீட்டல்ல' என்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியின் துவக்கமாக, பெண் அதிகாரம் 'லோகோ' வடிவில், பள்ளி மாணவர்கள் அணிவகுத்து நின்றனர். தொடந்து, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. அமைப்பின் தலைவர் பிரபு வரவேற்றார்.
பள்ளி தலைமையாசிரியர் சங்கர் தலைமை வகித்து பேசுகையில், ''பெண்கள் எல்லா காலகட்டத்திலும், உறுதியாக எல்லா செயல்களிலும் ஈடுபட வேண்டும். மாதவிடாய் என, கூறி செயல்களிலிருந்து ஒதுக்கி விட கூடாது. மாதவிடாய் என்பது, சாதாரணமாக பெண்கள் உடலியல் ஏற்படும் மாற்றம். அவை தீட்டல்ல. எனவே, அச்சப்பட தேவையில்லை,'' என்றார். நிகழ்ச்சியில், அமைப்பின் கூடலுார் தலைவி தேவதர்ஷினி, துணை தலைவி சுவேதா, ஆசிரியர்கள் மாணவர்கள் பங்கேற்றனர்.