/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தோடர் பழங்குடியின கிராமத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
தோடர் பழங்குடியின கிராமத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
தோடர் பழங்குடியின கிராமத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
தோடர் பழங்குடியின கிராமத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : மார் 03, 2024 10:52 PM
ஊட்டி;தோடர் பழங்குடியினர் மக்கள் மத்தியில் தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நீலகிரி எஸ்.பி., சுந்தரவடிவேல் உத்தரவின் பேரில், மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக. ஊட்டி அருகே தேனாடுகம்பை போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட கொரனுார், பிக்கபத்தி மந்தில் சமூகநீதி மற்றும் மனித உரிமை பிரிவு போலீசார் சார்பில், தோடர் பழங்குடியினர் மக்கள் மத்தியில் தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
அதில், தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டங்கள், சமூகநீதி, மனித உரிமை, சமத்துவம் ஆகியவற்றின் அவசியம், மதுவின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. போக்குவரத்து விதிகள் குறித்தும் விழிப்புணர்வு கருத்துக்கள் எடுத்து கூறப்பட்டது.
மேலும், கிராம மக்களிடம் பஸ், வசதி, சமுதாய கூடம், குடியிருப்பு வசதி குறித்து கேட்டறியப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டது. பழங்குடியின மக்களுக்கான அரசின் திட்டங்கள் குறித்தும் விளக்கப்பட்டது.
ரூரல் டி.எஸ்.பி., விஜயலட்சுமி, சமூகநீதி மற்றும் மனித உரிமை பிரிவு புள்ளியியல் ஆய்வாளர் குணசீலன், எஸ்.ஐ.,க்கள் ராமச்சந்திரன், ஜான் கென்னடி, நேரு, மாத்தராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

