ADDED : ஆக 17, 2026 06:44 PM
அ நிறம் | அளவு
கூடலுார்: கூடலுாரில் நடந்த போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர்.
கூடலுார் வருவாய் துறை சார்பில், போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. நகராட்சி அலுவலகம் அருகே, துவங்கிய பேரணியை, கூடலுார் ஆர்.டி.ஓ., குணசேகரன், டி.எஸ்.பி., கோபாலகிருஷ்ணன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
ஊர்வலத்தில், போதை பொருள் தடுப்பு குறித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஊர்வலம், பழைய கோர்ட் சாலையில் நிறைவு பெற்றது. கூடலுார் தாசில்தார் முனீஸ்வரன், கோட்டா அலுவலர் சரவணன், பழங்குடியினர் நல தாசில்தார் நந்தகோபால் உட்பட பலர் பங்கேற்றனர்.
