/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'ஆன்லைன்' மோசடிகளில் சிக்காமல் இருக்க விழிப்புணர்வு
/
'ஆன்லைன்' மோசடிகளில் சிக்காமல் இருக்க விழிப்புணர்வு
'ஆன்லைன்' மோசடிகளில் சிக்காமல் இருக்க விழிப்புணர்வு
'ஆன்லைன்' மோசடிகளில் சிக்காமல் இருக்க விழிப்புணர்வு
ADDED : டிச 31, 2024 06:37 AM

குன்னுார், : குன்னுாரில், 'ஆன்லைன்' மோசடிகளில் சிக்காமல் இருக்க மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
'நீலகிரி மாவட்டத்தில், குற்றங்கள் தடுப்பு மற்றும் ஆன்லைன் மோசடியில் சிக்காமல் தவிர்ப்பது; மொபைலில் காவலர் செயலி பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்,' குறித்து, மாவட்ட எஸ்.பி., நிஷா உத்தரவின் பேரில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, குன்னுார் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் சிறப்பு எஸ்.ஐ., பாலகிருஷ்ணன் தலைமையில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், காவலர் நித்யா பேசியதாவது:
மொபைல் போன்களில், ஆதார் கார்டு அப்டேஷன் உட்பட பல தகவல்கள் செய்து தருவதாக கூறி, மோசடி நபர்கள் அழைத்து, ஓ.டி.பி., எண் கேட்டால், கட்டாயம் கொடுக்க கூடாது. அவ்வாறு கொடுத்தால் உங்கள் வங்கி கணக்கு காலியாகி பண மோசடி நடந்து விடும். வணிகவரி துறை உட்பட அரசு துறைகளில் இருந்து அழைப்பதாகவும், டிஜிட்டல் அரஸ்ட் செய்வதாகவும் கூறினால், உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தற்போது, 24 மணி நேரமும் செயல்படுத்தப்பட்டு வரும் காவலர் செயலியை பதிவிறக்கம் செய்து, எந்த பிரச்னைகளாக இருந்தாலும் உடனடியாக அதில் தெரிவிக்கலாம். வயதானவர்களுக்கு, அவசர கால மருந்துகள் தேவைப்படும் பட்சத்தில் செயலி மூலம் கேட்டால் உடனடியாக கொண்டு சென்று வழங்கும் சேவையும் செய்யப்படுகிறது,''என்றார்.