UPDATED : அக் 03, 2026 12:00 AM
ADDED : அக் 02, 2026 07:56 PM
ஊட்டி: இயற்கை வள ஆதாரங்களை அழிவில் இருந்து மீட்டெடுக்க, விழிப்புணர்வு யாத்திரை ஊட்டியில் நேற்று துவங்கியது.
தாய் மண்ணே வணக்கம் என்ற அமைப்பு சார்பில் நடந்த யாத்திரைக்கு, இயற்கை விவசாய சங்கத்தை சேர்ந்த, பெள்ளியப்பா தலைமை வகித்தார்.
தமிழ்நாடு பழங்குடியின சங்க நிர்வாகி குணசேகரன், கோவையை சேர்ந்த சூழலியல் அறிஞர் சதாசிவம் மற்றும் புதுக்கோட்டை இயற்கை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை சேர்ந்த ஆதப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கிராமங்களின் இயற்கை வள ஆதாரங்களை அடுத்தடுத்து தலைமுறைக்காக மீட்டெடுத்து மேம்படுத்துவது, கரிமசத்து குறைவு, ரசாயன உரம் பயன்பாடு காரணமாக, மண்வளம் மலடாவதை தடுப்பது, நீர்நிலைகள், விளைநிலங்கள், காடுகள், மேய்ச்சல் நிலங்களுடன், சுற்றுச்சூழலை பாதுகாப்பது, பருவநிலை மாற்றத்தின் விளைவு ஆகியவற்றை மையமாகக் கொண்டு யாத்திரை நடந்தது.
கடந்த, 1990களில் நம்மாழ்வார் மேற்கொண்ட நடை பயணங்கள் இயற்கை வேளாண்மை குறித்தும், கிராமப்புற வளர்ச்சிக்கும் வித்திட்டதை போல, காந்தி ஜெயந்தி நாளான நேற்று, ஊட்டி தொட்டபெட்டா சந்திப்பில் துவங்கிய யாத்திரை, பல்வேறு மாவட்டங்களை கடந்து, ஜன., 10ம் தேதி, சென்னையை அடைகிறது.
இதில், மூத்த இயற்கை உழவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் பங்கேற்றனர்.
