UPDATED : அக் 03, 2026 12:00 AM
ADDED : அக் 02, 2026 07:57 PM

அ நிறம் | அளவு
குன்னூர்: குன்னூர் அடார் பகுதியில் குழந்தைகளின் சைக்கிளை ஓட்டி சென்றவர், பிரேக் பிடிக்காததால் சுவற்றில் மோதி படுகாயமடைந்தார்.
நீலகிரி மாவட்டம் அடார் எஸ்டேட் பங்களாவில் பணியாற்றும் செக்யூரிட்டி சுரேஷ், 55, நேற்று பணி முடித்து, சிறுவர்களின் சைக்கிளை எடுத்து ஓட்டி இறக்கமான பகுதியில் சென்ற போது, பிரேக் பிடிக்காமல் நிலைதடுமாறி தடுப்பு சுவற்றில் மோதி காயமடைந்தார்.
கண் மற்றும் நெற்றி பகுதியில் காயமடைந்த இவரை, 108 ஆம்புலன்ஸில் மீட்டு குன்னூர் மருத்துவமனையில் சேர்த்தனர்.தீவிர சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அப்பர் குன்னூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
