தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்: அடிப்படை வசதிக்கு வலியுறுத்தல்

ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்: அடிப்படை வசதிக்கு வலியுறுத்தல்

ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்: அடிப்படை வசதிக்கு வலியுறுத்தல்


UPDATED : அக் 03, 2026 12:00 AM

ADDED : அக் 02, 2026 07:57 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 03, 2026 12:00 AM ADDED : அக் 02, 2026 07:57 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கூடலூர்: கூடலூர், முதுமலை, ஸ்ரீமதுரை, மசினகுடி, மாவனல்லா ஊராட்சிகளில் நடந்த கிராம சபை கூட்டங்களில் மக்கள் பங்கேற்று, அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தினார்.

காந்தி ஜெயந்தி தினத்தில் கூடலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் கிராம சபை கூட்டம் நேற்று, நடந்தது. முதுமலை ஊராட்சி கிராம சபை கூட்டம் குனில் பகுதியில் கூடலூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நம்பிராஜ் தலைமையில் நடந்தது. ஸ்ரீமதுரை ஊராட்சி கிராம சபை கூட்டம் அங்குள்ள அரசு பள்ளி வளாகத்தில் கூடலூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கவிதா தலைமையில் நடந்தது.

அடிப்படை வசதி தேவை



மசினகுடி ஊராட்சி ஊராட்சி கிராம சபா கூட்டம் மாயார் பகுதியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஷ் தலைமையில் நடந்தது.

மசினகுடி ஊராட்சியில் இருந்து பிரிந்து புதிதாக உருவாக்கப்பட்ட மாவனல்லா ஊராட்சியின் முதல் கிராம சபை கூட்டம் மாவனல்லா பகுதியில் ஊராட்சி செயலாளர் கிரன் தலைமையில் நடந்தது, கிராம சபை கூட்டத்தில், கிராம மக்களுக்கு 125 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை நடைமுறைப் படுத்துவது குறித்தும், மாநில அரசின் டி.என்., வெற்றி திட்டத்தில் கிராம ஊராட்சிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்துவது உள்ளிட்ட மத்திய, மாநில அரசுகளில் திட்டங்கள் குறித்து அதிகாரிகள் விளக்கினர்.

பொதுமக்கள் கூறுகையில், 'ஏற்கனவே நடந்த கிராம சபை கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட அடிப்படை வசதிகளை விரைந்து முடிக்க வேண்டும். கிராமங்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.’ என்றனர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us