தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ஆயுத பூஜை கொண்டாட்டம்

ஆயுத பூஜை கொண்டாட்டம்

ஆயுத பூஜை கொண்டாட்டம்


ADDED : அக் 19, 2026 05:35 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 19, 2026 05:35 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கூடலூர்: கூடலூரில் சரஸ்வதி, ஆயுத பூஜை முன்னிட்டு கோவில்கள், வாகன ஸ்டாண்டுகளில் சிறப்பு பூஜைகள் நடந்தது.

கூடலூர், விநாயகர் கோவில், புத்தூர்வயல் மாதேஸ்வரன் கோவில், கலிங்கரை சிவன் கோவில், நம்பாலகோட்டை வேட்டைகொருமகன் கோவில்களில் நேற்று, காலை சிறப்பு பூஜை நடந்தது பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். மாணவர்கள், தங்கள் படிக்கும் புத்தகங்களை கோவிலுக்கு எடுத்துச் சென்று பூஜை செய்தனர்.

வாகன ஓட்டுனர்கள், வாகனத்தை சுத்தம் செய்து மாலை அணிவித்து கோவிலுக்கு எடுத்து சென்று பூஜை செய்து எடுத்து வந்தனர்.

கூடலூரில் உள்ள ஆட்டோ, ஜீப், டூரிஸ்ட் வாகனங்கள் நிறுத்தும் இடங்களை அலங்கரித்து, வாகனங்களுக்கு மாலை அணிவித்து, பூஜை செய்து ஆயுதபூஜை கொண்டாடினர்.

வீடுகளில், வேலைக்கு பயன்படுத்தும் பொருட்கள், மாணவர்கள் படிக்கும் புத்தகங்கள், வாகனங்களுக்கு பூஜை செய்து, சரஸ்வதி மற்றும் ஆயுதபூஜை கொண்டாடினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us