தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் தொழிலாளர் சங்கம் முதல்வருக்கு மனு

தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் தொழிலாளர் சங்கம் முதல்வருக்கு மனு

தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் தொழிலாளர் சங்கம் முதல்வருக்கு மனு


UPDATED : அக் 19, 2026 05:35 PM

ADDED : அக் 19, 2026 05:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 19, 2026 05:35 PM ADDED : அக் 19, 2026 05:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோத்தகிரி: டேன்டீ தொழிலாளர்களுக்கு, 20 சதவீத போனஸ், 15 நாட்களுக்கு முன்னதாக வழங்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது.

சோசலிச தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் வெற்றிவேல், முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு;

தாயகம் திரும்பிய தமிழர்களின் வாழ்வாதாரத்திற்காக, நீலகிரியில் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு தேயிலைத் தோட்டக்கழகத்தில், (டேன் டீ ) ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர்.

தொழிலாளர்களுக்கு, குறைந்தபட்ச கூலி சட்டத்தின்படி, 2025, ஜூலை 1ம் தேதி அரசாணை அறிவிப்புப்படி, 700 ரூபாய் தின ஊதியம் வழங்க வேண்டும். பணி மூப்பு மற்றும் விருப்ப ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு, 14 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தனித்தனி வீடுகள் கட்டித் தர வேண்டும்.

டேன் டீ மருத்துவமனைகள் தொழிலாளர்களுக்கு பலன் இல்லாத நிலையில், இந்த மருத்துவ மனைகளால், இழப்பு ஏற்படுவடுவதை தவிர்க்க, டேன் டீ மருத்துவமனைகளை அரசே ஏற்று, ஆம்புலன்ஸ் வசதிகளுடன், பொது மருத்துவமனைகளாக மாற்றி, அனைத்து மக்களும் பயன்பெற செய்ய வேண்டும். டேன் டீ தொழிலாளர்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் வகையில், 20 சதவீதம் போனஸ், 15 நாட்களுக்கு முன்னதாகவே வழங்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us