UPDATED : அக் 21, 2026 06:16 PM
ADDED : அக் 21, 2026 06:14 PM

அ நிறம் | அளவு
பந்தலுார்: பந்தலுாரில் உழைக்கும் கரங்கள் ஆட்டோ ஓட்டுனர் சங்கம் சார்பில் நடந்த ஆயுத பூஜை தலைவர் நாசர் தலைமை வகித்தார்.
அர்ச்சகர் கருப்பையா அனைத்து ஆட்டோக்களுக்கும் சிறப்பு பூஜை செய்து பிரசாதம் வழங்கினார். தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநர்கள் திருஷ்டி தேங்காய் உடைத்து வழிபட்டனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு சுண்டல், பொங்கல் வழங்கி தப்பாட்டத்துடன் நடனமாடி மகிழ்ச்சி அடைந்தனர். செயலாளர் கோவிந்தராஜ், பொருளாளர் மோகன்தாஸ் உள்ளிட்ட உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
