ADDED : அக் 21, 2026 07:02 PM

அ நிறம் | அளவு
பாலக்காடு: பாலக்காட்டில் உள்ள கோவில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், சித்தூர் துஞ்சன் மடம், கல்லேகுளங்கரை ஏமூர் பகவதி அம்மன், யாக்கரை மணப்புள்ளிக்காவு பகவதி அம்மன், கொடுந்திரப்புள்ளி கிராமம் ஸ்ரீ பெருமாள், புத்துார் திருப்புராய்க்கல் பகவதி அம்மன், சின்மயா தபோவனம் உட்பட கோவில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் விதமாக, பெற்றோர் மடியில் அமர வைத்து குழந்தைகளின் நாக்கில், முதலில் இனிப்பு வழங்கி தங்க மோதிரத்தால் அட்சரம் எழுதப்பட்டது. அதன் பின், 'ஓம் ஹரி ஸ்ரீ கணபதே நம' என, குழந்தைகளின் கையைப்பிடித்து பச்சரிசியில் எழுத வைத்து, எழுத்தறிவு துவங்கப்பட்டது.
