தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/குளிரிலும் மாலை அணிந்து ஐயப்ப பக்தர்கள் விரதம்

குளிரிலும் மாலை அணிந்து ஐயப்ப பக்தர்கள் விரதம்

குளிரிலும் மாலை அணிந்து ஐயப்ப பக்தர்கள் விரதம்


UPDATED : நவ 19, 2026 05:34 PM

ADDED : நவ 19, 2026 05:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 19, 2026 05:34 PM ADDED : நவ 19, 2026 05:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊட்டி:

ஊட்டி கடும் குளிரிலும், ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து ஐயப்பன் கோவிலுக்கு சென்று வருகின்றனர்.

கார்த்திகை மாதம் பிறந்தாலே, ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து ஒரு மண்டல விருதம் இருந்து பய பக்தியுடன் ஐயப்பனை தரிசிக்க இருமுடியை தலையில் சுமந்து செல்வது வழக்கம். அதன்படி, நடப்பாண்டின் மண்டல பூஜைக்காகவும், மகர ஜோதியை தரிசனம் செய்வதற்காகவும் மாலை அணிந்து, 41 நாட்கள் விரதத்தை ஐயப்ப பக்தர்கள் தொடங்கி உள்ளனர்.

இந்நிலையில், ஊட்டியில் கடும் குளிர் நிலவி வரும் நிலையில், ஐயப்பன் கோவிலில் கடந்த மூன்று நாட்களாக பக்தர்கள் வரிசையாக நின்று மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள் தினமும் காலை, மாலை நேரங்களில் புனித நீராடி விட்டு கோவில்களில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதிகாலையில் நகர பகுதி கோவில்களில் ஐயப்பன் பாடல் ஒலிக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us