/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாலையில் காட்டெருமையை விரட்டிய குட்டி யானை
/
சாலையில் காட்டெருமையை விரட்டிய குட்டி யானை
ADDED : ஆக 03, 2025 08:32 PM
குன்னுார்; குன்னுார்- மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில், கே.என்.ஆர்., அருகே காட்டெருமை கன்றை விரட்டிய பின், ஓட்டம் பிடித்த குட்டி யானையின் 'வீடியோ' வைரலாகி உள்ளது.
குன்னுார்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில், 10க்கும் மேற்பட்ட யானைகள் உணவுக்காக உலா வருகின்றன.
இந்நிலையில், குன்னுார் கே.என்.ஆர்., அருகே ஆட்டுக்கல் பகுதியில், குட்டியுடன், காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளன. அதே இடத்தில், குட்டிகளுடன் காட்டெருமைகளும் முகாமிட்டிருந்தன.
அதில், காட்டெருமை கன்றை விரட்டிய குட்டி யானை ஒன்று, மீண்டும் ஓட்டம் பிடித்து கூட்டத்துடன் சேர்ந்தது. இந்த காட்சியை தேசிய நெடுஞ்சாலையில் இருந்த சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து, 'வீடியோ' எடுத்தனர். தற்போது, அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.