/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குழந்தை இயேசு தேர்பவனி; உள்ளூர் மக்கள் பங்கேற்பு
/
குழந்தை இயேசு தேர்பவனி; உள்ளூர் மக்கள் பங்கேற்பு
ADDED : ஜன 20, 2025 10:38 PM

கூடலுார்; கூடலுார் குழந்தை இயேசு ஆலய தேர் பவனி ஊர்வலம் நடந்தது.
கூடலுார் நர்த்தகி பகுதியில் அமைந்துள்ள அற்புத குழந்தை இயேசு ஆலய திருவிழா, 12ம் தேதி காலை, 9:30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. 13ம் தேதி முதல், 18ம் தேதி வரை தினமும் மாலை, 5:00 மணிக்கு, திருப்பலி நடந்தது.
நேற்று முன்தினம் காலை, 10:00 மணிக்கு கூட்டு திருப்பலி, சிறுவர், சிறுமியருக்கு புது நன்மை, உறுதிப்பூசுதல் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாலை, 6:00 மணிக்கு தேர்பவனி ஊர்வலம் துவங்கியது. ஊர்வலத்தை அருட்தந்தை சில்வர்ஸ்டார் விஜய் துவக்கி வைத்தார். ஊர்வலத்தில் பங்கு மக்கள் குழந்தை இயேசு குறித்த பாடல்களை பாடி பங்கேற்றனர். ஊர்வலம் கோழிக்கோடு சாலை, மைசூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று ஆல யத்தில் நிறைவு பெற்றது.

