/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பெங்களூரு அறிவியல் மையம் அரசு பள்ளி மாணவர்கள் பார்வை
/
பெங்களூரு அறிவியல் மையம் அரசு பள்ளி மாணவர்கள் பார்வை
பெங்களூரு அறிவியல் மையம் அரசு பள்ளி மாணவர்கள் பார்வை
பெங்களூரு அறிவியல் மையம் அரசு பள்ளி மாணவர்கள் பார்வை
ADDED : மார் 04, 2024 11:52 PM

சூலுார்;பெங்களூரு அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மையத்தை அரசு பள்ளி மாணவர்கள் பார்வையிட்டனர்.
மத்திய அரசின் கீழ் இயங்கும் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மையம், மற்ற ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைந்து 'ஜிக்யாசா' எனும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்துகிறது.
இதன் வாயிலாக, மாணவர்கள் மற்றும் விஞ்ஞானிகளை ஒருங்கிணைத்து ஆய்வுகள் குறித்து விழிப்புணர்வை மாணவர்களிடத்தில் ஏற்படுத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, தேசிய அறிவியல் தினத்தை ஒட்டி, பெங்களூரு சி.எஸ்.ஐ.ஆர்., மற்றும் நேஷனல் ஏரோஸ்பேஸ் லேபாரட்டரீஸ் இணைந்து நடத்திய நிகழ்ச்சியில், காங்கயம் பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள், 40 பேர் ஆசிரியர்களுடன் பங்கேற்றனர்.
அங்கு நடந்த ஆராய்ச்சி களை பார்வையிட்டு, விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடினர்.
இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், ''ஆராய்ச்சி குறித்த அறிவியல் நுணுக்கங்களை விஞ்ஞானிகள் விளக்கினர். இதன் மூலம் அறிவியல் ஆராய்ச்சி குறித்த ஆர்வம் அதிகரித்துள்ளது,'' என்றனர்.
அறிவியல் ஆசிரியர் கோபால்சாமி, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சத்தியசீலன் மற்றும் ஆசிரியைகள் மாணவர்களுடன் சென்றிருந்தனர்.

