/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மானிய தொகையில் ரூ. 8 லட்சம் மோசடி: வங்கி அதிகாரி கைது
/
மானிய தொகையில் ரூ. 8 லட்சம் மோசடி: வங்கி அதிகாரி கைது
மானிய தொகையில் ரூ. 8 லட்சம் மோசடி: வங்கி அதிகாரி கைது
மானிய தொகையில் ரூ. 8 லட்சம் மோசடி: வங்கி அதிகாரி கைது
ADDED : ஏப் 22, 2025 07:13 AM

ஊட்டி; ஊட்டியில், விவசாய கடன் மானிய தொகையில், 8 லட்சம் ரூபாய் மோசடி செய்த வங்கி அதிகாரி கைது செய்யப்பட்டார்.
நீலகிரி மாவட்டம், ஊட்டியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில், சென்னையை சேர்ந்த செந்தில்குமார்,46, ஜூனியர் அதிகாரியாக இரண்டு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
சமீபத்தில் இவருக்கு பணி மாறுதல் உத்தரவு வந்ததால் வேறு இடத்திற்கு செல்ல தயாரானார். இதற்கிடையில் வங்கியில் தணிக்கை பணி நடந்தது.
அதில், மானியத்துடன் கூடிய விவசாய கடன் வழங்கும் பிரிவில், பயனாளிகளுக்கு மானிய தொகை வழங்கியதில் செந்தில்குமார் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. மீண்டும் நடந்த முழு தணிக்கையில, 8 லட்சம் ரூபாய் மோசடி செய்தது உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து, வங்கி தலைமை மேலாளர் ரமேஷ் பாபு, ஊட்டி பி1 போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். டவுன் டி.எஸ்.பி., நவீன்குமார், இன்ஸ்பெக்டர் முரளிதரன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து, செந்தில்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.