/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள்; என்.சி.சி., மாணவர்கள் விழிப்புணர்வு

ADDED : செப் 24, 2024 11:33 PM
ஊட்டி : தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் குறித்து என்.சி.சி., மாணவர்கள் சுற்றுலா பயணியரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மத்திய அரசின் 'ஸ்வச் பாரத் திவாஸ்' துவங்கி, 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து, அக்., 2ம் தேதி நாடு முழுவதும் சிறப்பிக்கப்பட உள்ளது. இதையொட்டி, கடந்த, 17 ம் தேதி முதல் அக்., 2ம் தேதி வரை மக்கள் மத்தியில் சுத்தம், சுற்றுசூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, ஊட்டி புனித சூசையப்பர் மேல்நிலை பள்ளி என்.சி.சி., மாணவர்கள், 30 பேர், அதிகாரி டேவிட் பத்மநாபன் தலைமையில், ஊட்டி உலக பாரம்பரிய ரயில் நிலையத்தை முழுவதுமாக சுத்தம் செய்து மட்கும் குப்பை, மட்காத குப்பையை பிரித்து சேகரித்து அப்புறப்படுத்தினர்.
'தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிக்க கூடாது , பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் கட்டாயம் நீலகிரிக்குள் எடுத்து வரக்கூடாது,' என்ற விழிப்புணர்வை சுற்றுலா பயணிகளிடம் கூறினார்.
ரயில் நிலைய அதிகாரி மணிகண்டன், என்.சி.சி., மாணவர்களை ஊக்குவித்து பாராட்டு தெரிவித்தார்.