/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தடை செய்யப்பட்ட 'பிளாஸ்டிக்' பறிமுதல்; ஊழியர்களிடம் சுற்றுலா பயணிகள் வாக்குவாதம்
/
தடை செய்யப்பட்ட 'பிளாஸ்டிக்' பறிமுதல்; ஊழியர்களிடம் சுற்றுலா பயணிகள் வாக்குவாதம்
தடை செய்யப்பட்ட 'பிளாஸ்டிக்' பறிமுதல்; ஊழியர்களிடம் சுற்றுலா பயணிகள் வாக்குவாதம்
தடை செய்யப்பட்ட 'பிளாஸ்டிக்' பறிமுதல்; ஊழியர்களிடம் சுற்றுலா பயணிகள் வாக்குவாதம்
ADDED : ஏப் 01, 2025 09:55 PM

கூடலுார்; கூடலுாரை ஒட்டிய மாநில எல்லையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்யும் ஊழியர்களிடம் சுற்றுலா பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நீலகிரி மாவட்டத்தின், சுற்றுச்சூழலை பாதுகாக்க, 21 வகையான பிளாஸ்டிக் பொருட்கள், பிளாஸ்டிக் தண்ணீர் மற்றும் குளிர்பான பாட்டில்கள் விற்பனை செய்யவும், பயன்படுத்தவும் தடை விதித்துள்ளனர்.
வெளி மாநிலங்களில் இருந்து, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் எடுத்து வருவதை தடுக்க, கூடலூரை ஒட்டிய மாநில எல்லைகளில், தற்காலிக ஊழியர்கள், சுற்றுலா வாகனங்களை சோதனை செய்த பின் நீலகிரிக்குள் அனுமதிக்கின்றனர்.
இந்நிலையில், ரம்ஜான் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு, நேற்று கேரளாவில் இருந்து கூடலுார் வழியாக நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. சுற்றுலா வாகனங்களை ஊழியர்கள், சோதனை செய்து, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த பின் வாகனங்களை அனுமதித்தனர்.
நாடுகாணி சோதனை சாவடியில், சுற்றுலா பயணிகள் சிலர் தங்கள் எடுத்து வந்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்ய எதிர்ப்பு தெரிவித்து, ஊழியர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். ஊழியர்கள், அரசு உத்தரவை விலக்கி, பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்தனர்.
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில்,'மாநில எல்லையில் அறிவிப்பு பலகை இல்லாததால், சுற்றுலா பயணிகள் சிலர் பிளாஸ்டிக் தொடர்பாக ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் சூழல் உள்ளது. இதனை தடுக்க, பிளாஸ்டிக் தடை குறித்து, மாநில எல்லைகளில் தமிழ், ஆங்கிலம், மலையாள மொழிகளில் அறிவிப்பு பலகை வைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'என்றனர்.