/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்
/
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்
ADDED : செப் 10, 2025 12:19 AM

கூடலுார்: தமிழக- கர்நாடக எல்லையான கக்கநல்லா வழியாக, தமிழகத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை, நீலகிரிக்கு கடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதை தொடர்ந்து, நீலகிரி மாவட்டம் மசினகுடி போலீசார் கக்கனல்லா சோதனை சாவடியில் நேற்று, காலை வாகன சோதனையை தீவிரப்படுத்தினர்.
காலை, 7:00 மணிக்கு கர்நாடகாவில் இருந்து வந்த வாகனத்தை சோதனை மேற்கொண்டனர். அதில், தமிழகத்தில் தடை செய்யப்பட்ட, 173 பண்டல் புகையிலை பொருட்களை கடத்தி வருவது தெரியவந்தது.
வாகனத்துடன் அதனை பறிமுதல் செய்து, கர்நாடக மாநிலம் மைசூரு பேலவாடி பகுதியை சேர்ந்த பிரவீன்குமார், 45, என்பவரை கைது செய்தனர். இதன் மதிப்பு வெளியிடப்படவில்லை.
இன்ஸ்பெக்டர் சுப்புரத்தினம் விசாரணை நடத்தி வருகிறார்.