தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/அடிப்படை வசதி வேண்டும் வி.சி.க., ஆர்ப்பாட்டம்

அடிப்படை வசதி வேண்டும் வி.சி.க., ஆர்ப்பாட்டம்

அடிப்படை வசதி வேண்டும் வி.சி.க., ஆர்ப்பாட்டம்


ADDED : அக் 10, 2026 12:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 10, 2026 12:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோத்தகிரி:

கோத்தகிரி கூக்கல்தொரை பகுதியில், அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, வி.சி.க., சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது.

இப்பகுதியில், அண்ணாநகர், சுண்டக்கரை, கம்பட்டிகம்பை மற்றும் ஜீவா நகர் கிராமங்களில், 20 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் வசிக்கின்றனர். இங்கு, நடைபாதை, சாலை வசதி, குடிநீர் மற்றும் பொது மயானம், மின் வசதி இல்லாததால், மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட நிர்வாகத்திற்கு பல முறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில், அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, வி.சி.க., சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது.

சட்டமன்ற தொகுதி செயலாளர் பத்மநாபன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் மோகன் குமார் தலைமை வகித்தார். மண்டல துணை செயலாளர் மன்னரசன், பொது நிர்வாக செயலாளர் சகாதேவன் உள்ளிட்டோர், கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஒருங்கிணைப்பாளர் ஜேசுதாஸ் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us