/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சுற்றுலா பயணியர் வசதிக்காக பூங்காவில் ரூ.8 லட்சத்தில் பேட்டரி கார் வசதி

ADDED : அக் 26, 2025 11:13 PM

ஊட்டி: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு, பாரத ஸ்டேட் வங்கி சார்பில், 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான பேட்டரி கார் மற்றும் 4.65 லட்சம் மதிப்பீட்டில், ஐந்து வாட்டர் ஏ.டி.எம்., வழங்கப்பட்டது.
தாவரவியல் பூங்கா மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில், சப் கலெக்டர் அபிலாஷா கவுர், தோட்டக்கலை துணை இயக்குனர் நவனீதா முன்னிலையில், பாரத ஸ்டேட் வங்கி நிர்வாக மேலாண்மை இயக்குனர் வினய் எம் டோன்ஸ் பேட்டரி கார் சாவியையும், வாட்டர் ஏ.டி.எம்.,க் கான காசோலை வழங்கினார்.
மேலாண்மை இயக்குனர் வினய் எம் டோன்ஸ் பேசுகையில், ''சர்வதேச சுற்றுலா மையமான தாவரவியல் பூங்காவுக்கு, நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
மாவட்டத்தில், பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து சுற்றுச்சூழலை பாதுகாப்பது வரவேற்கதக்கது. பேட்டரி கார், வாட்டர் ஏ.டி.எம்., பூங்காவுக்கு பயனுள்ளதாக அமையும்.'' என்றார்.
பாரத ஸ்டேட் வங்கி சி.ஜி.எம்., விவேகானந் சவுத்ரி, ஜி.எம்., ஹரிதா பூர்ணிமா, டி.ஜி.எம்., அருண் மற்றும் அரசு தாவரவியல் பூங்கா தோட்டக்கலை உதவி இயக்குனர் பெபிதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.