/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அரசு மருத்துவ கல்லுாரியில் நோயாளிகளுக்காக 'பேட்டரி கார்'
/
அரசு மருத்துவ கல்லுாரியில் நோயாளிகளுக்காக 'பேட்டரி கார்'
அரசு மருத்துவ கல்லுாரியில் நோயாளிகளுக்காக 'பேட்டரி கார்'
அரசு மருத்துவ கல்லுாரியில் நோயாளிகளுக்காக 'பேட்டரி கார்'
ADDED : ஜூலை 29, 2025 07:17 PM

ஊட்டி:
ஊட்டி அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் வசதிக்காக இலவசமாக பேட்டரி கார் இயக்கப்பட்டு வருகிறது.
ஊட்டி அருகே, 'கால்ப் கிளப்' பகுதியில் சமீபத்தில் புதிய அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை திறக்கப்பட்டது. அனைத்து மருத்துவ பிரிவுகளும் செயல்பட்டு வருகிறது. தினமும் அதிகளவில் வெளி நோயாளிகள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர்.
சாலையில் இருந்து மருத்துவமனைக்கு நோயாளிகள் மேடான பகுதியில் நடந்து செல்ல சிரமம் ஏற்பட்டது. இதனையடுத்து, மருத்துவமனை நிர்வாகம் பேட்டரி கார் வாங்க நடவடிக்கை எடுத்தனர்.
அதன்படி, நேற்று முதல் நோயாளிகளின் வசதிக்காக இலவசமாக பேட்டரி கார் இயக்கப்பட்டது. மருத்துவமனை நிர்வாகிகள் கூறுகையில்,'மாவட்டம் முழுவதிலும் இருந்து நாள்தோறும், 800 வெளிநோயிகள் வருகின்றனர்.
இவர்களின் வசதிக்காக, பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. தற்போது பேட்டரி கார் இயக்கப்பட்டதால் பெரும் பயன் ஏற்பட்டுள்ளது.
விரைவில் மற்றொரு பேட்டரி கார் வாங்க மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது,' என்றனர்.