/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கடையை உடைத்த கரடி: பொருட்கள் சேதம்
/
கடையை உடைத்த கரடி: பொருட்கள் சேதம்
ADDED : ஜன 08, 2025 10:34 PM
குன்னுார்; குன்னுார் டென்ட்ஹில் பகுதிக்கு அடிக்கடி வந்த கரடி, அரசு மேல் நிலைப்பள்ளி, துவக்கப் பள்ளி சத்துணவு மையங்களின் கதவை உடைத்து உள்ளே சென்று, எண்ணெய் உட்கொண்டு, உணவு பொருட்களை சேதப்படுத்தியது.
இங்கு விநாயகர் கோவில் அருகே, சசிகுமார் என்பவரின் பெட்டி கடையை உடைத்து பொருட்களை நாசம் செய்தது. கரடியை விரட்ட பள்ளி அருகே ஒலி எழுப்பும் தானியங்கி கருவியை வைத்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். எனினும், விநாயகர் கோவில் பகுதிக்கு நேற்று முன்தினம் இரவு வந்த கரடி கடைக்குள் புகுந்து பொருட்களை நாசம் செய்தது.
இப்பகுதி மக்கள் கூறுகையில், கரடி, 3வது முறையாக இதே கடையை உடைத்து உள்ளே புகுந்து பொருட்களை சேதம் செய்துள்ளது. எனவே, பெரிய பாதிப்பு ஏற்படும் முன் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.