/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊருக்குள் முகாமிட்ட கரடி; போராடி விரட்டிய வனத்துறை
/
ஊருக்குள் முகாமிட்ட கரடி; போராடி விரட்டிய வனத்துறை
ஊருக்குள் முகாமிட்ட கரடி; போராடி விரட்டிய வனத்துறை
ஊருக்குள் முகாமிட்ட கரடி; போராடி விரட்டிய வனத்துறை
ADDED : ஆக 18, 2025 08:37 PM

கூடலுார்; முதுமலை, மசினகுடி அருகே, குடியிருப்புக்குள் முகாமிட்ட கரடியை, வனத்துறையினர் பல மணி நேரம் போராடி வனத்துக்குள் விரட்டினர்.
முதுமலை மசினகுடி சிவகுமார் காலனியில், பூட்டிய வீட்டின் வளாகத்தில், நேற்று முன்தினம், நள்ளிரவு நுழைந்த கரடி அங்கேயே படுத்து உறங்கியது. நேற்று, காலை, மக்களின் சப்தம் கேட்டு எழுந்த கரடியை பார்த்த மக்கள் அலறி அடித்து வீட்டுக் குள் ஓடினர். வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
மசினகுடி துணை இயக்குனர் அருண்குமார். சிங்காரா வனச்சரகர் தனபால், முதுமலை வன கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் உட்பட, 35 வன ஊழியர்கள் கரடியை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும், 'மக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம்' என, ஒலிபெருக்கி மூலம் வனத்துறையினர் அறிவிப்பும் செய்தனர். கரடி வன ஊழியர்களுக்கு போக்கு காட்டி, ஊருக்குள் உலா வந்தது. இதனால், தீப்பந்தம் உதவியுடன், கரடி விரட்டும் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேரம் போராட்டத்திற்கு பின், மாலை, 4:00 மணிக்கு, கரடியை வனப்பகுதிக்குள் விரட்டினர். பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'குடியிருப்பு பகுதியில் இருந்து, வனப்பகுதிக்கு விரட்டப்பட்ட கரடி, மீண்டும் குடியிருப்புக்குள் நுழைவதை தடுக்க கண்காணித்து வருகிறோம்,' என்றனர்.