/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
எல்க்ஹில் பகுதியில் கரடி: மக்கள் நடமாடுவதில் அச்சம்
/
எல்க்ஹில் பகுதியில் கரடி: மக்கள் நடமாடுவதில் அச்சம்
எல்க்ஹில் பகுதியில் கரடி: மக்கள் நடமாடுவதில் அச்சம்
எல்க்ஹில் பகுதியில் கரடி: மக்கள் நடமாடுவதில் அச்சம்
ADDED : ஜூலை 02, 2025 08:33 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி :
ஊட்டி எல்க்ஹில் பகுதியில் பகல் நேரத்தில் கரடி சுற்றி திரிவதால், பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
ஊட்டி எல்க்ஹில் பகுதியில் கடந்த ஒரு வாரமாக பகல் நேரத்தில் கரடி ஒன்று சாலையோரம் , குடியிருப்பு பகுதிகளில் சுற்றி வருகிறது. பகல் நேரத்தில் சுற்றித் திரியும் கரடியை பார்த்த பொது மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். வனத்துறை ஊழியர்கள் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். 'கரடி நடமாட்டம் தொடர்ந்தால் கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,' என, உறுதி அளித்தனர்.