ADDED : செப் 28, 2026 06:54 PM
அ நிறம் | அளவு
ஊட்டி: ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளில் சமீபகாலமாக கரடி நடமாட்டம் அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன், ஊட்டி அருகே உள்ள லவ்டேல் பகுதியில் சாலையில் உலா வந்த கரடில, லவ்டேல் ரயில் நிலைய பாலத்தை கடந்து போலீஸ் நிலைய வளாகத்தில் உலா வந்தது. தற்போது, கோழிபண்ணை கிராம சாலையில் குட்டிகளுடன் கரடி உலா வந்தது. இதனால், குடியிருப்பு வாசிகள் அச்சமடைந்துள்ளனர். அப்பகுதியை சேர்ந்தவர்கள் கேரட் அறுவடை உள்ளிட்ட பணிகளுக்கு அதிகாலை நேரத்தில் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
மக்கள் கூறுகையில்,‘ ஊட்டி சுற்றுப்புற பகுதிகளில் சமீக காலமாக கரடி உலா வருவது அதிகரித்துள்ளது. வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு கரடிகளை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.
