போதை பொருள் வேண்டாம் விழிப்புணர்வு வாகன பிரசாரம்
போதை பொருள் வேண்டாம் விழிப்புணர்வு வாகன பிரசாரம்
ADDED : செப் 28, 2026 06:42 PM
அ நிறம் | அளவு
ஊட்டி: ஊட்டியில் போதை பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்கும் நோக்கில், விழிப்புணர்வு வாகன பிரசாரம் நடந்தது.
ஊட்டியில் பிரம்ம குமாரிகள் அமைப்பு சார்பில் போதை பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்கும் நோக்கில், விழிப்புணர்வு பிரசார வாகனத்தை ஊட்டி எம்.எல்.ஏ., போஜராஜன் துவக்கி வைத்தார்.
அதில், ‘நாடு முழுவதும் போதை பொருள் துஷ்பிரயோகம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி போதை பொருள் நுகர்வை தடுப்பது மற்றும் இளைஞர்கள் நேர்மறையான ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடிக்க ஊக்குவிப்பது,’ ஆகியவை வலியுறுத்தப்பட்டன. பிரம்ம குமாரிகள் சகோதரி ராஜேஸ்வரி, சண்முகம் உட்பட பலர் பங்கேற்றனர்.
