/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தேயிலை தோட்டத்தில் கரடி உலா; தோட்ட தொழிலாளர்கள் அச்சம்
/
தேயிலை தோட்டத்தில் கரடி உலா; தோட்ட தொழிலாளர்கள் அச்சம்
தேயிலை தோட்டத்தில் கரடி உலா; தோட்ட தொழிலாளர்கள் அச்சம்
தேயிலை தோட்டத்தில் கரடி உலா; தோட்ட தொழிலாளர்கள் அச்சம்
ADDED : ஜூலை 06, 2025 10:39 PM

குன்னுார்; குன்னுார் குந்தா சாலை, குன்னக்கொம்பை கிராம தேயிலை தோட்டத்தில் உலா வரும் கரடியால் தோட்ட தொழிலாளர்கள் பணிக்கு செல்ல அச்சமடைந்துள்ளனர்.
குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
உணவு மற்றும் தண்ணீரை தேடி தற்போது குடியிருப்பு பகுதிகளுக்கு வரும் கரடிகள், யாரும் இல்லாத வீடுகளின் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்து பொருட்களை சேதம் செய்து வருகின்றன.
இந்நிலையில், நேற்று குன்னுார் குந்தா சாலை குன்னக்கம்பை கிராமத்திற்குள் வந்த கரடியால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த கரடி சாலை வழியாக சென்று தேயிலை தோட்டத்தில் தஞ்சம் அடைந்தது. இதனால் அப்பகுதியில் பசுந்தேயிலை பறிக்க செல்ல முடியாமல் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.
வனத்துறையினர் கண்காணித்து கரடியை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.