/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பராமரிப்பின்றி காணப்படும் பாரதியார் வணிக வளாகம்
/
பராமரிப்பின்றி காணப்படும் பாரதியார் வணிக வளாகம்
ADDED : நவ 03, 2024 10:17 PM
ஊட்டி; நகராட்சிக்கு சொந்தமான பாரதியார் வணிக வளாகம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது.
ஊட்டி சேரிங்கிராசில் நகராட்சிக்கு சொந்தமான பாரதியார் வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. இங்கு, 30க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. வணிக வளாகத்தின் தரைப்பகுதி , படிக்கட்டுகள் போதிய பராமரிப்பு இன்றி சிதிலமடைந்து காணப்படுகிறது.
பகல் மற்றும் இரவு நேரங்களில் படிக்கட்டுகளில் அமர்ந்து சிலர் மது அருந்தி மதுபாட்டில்களை அங்கேயே உடைத்து செல்வதுடன், வளாகத்திற்குள் சுகாதார சீர்கேடு ஏற்படுத்தி வருகின்றனர்.
வணிக வளாகத்திற்கு வரும் மக்கள் முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாக ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.