ADDED : ஜூலை 07, 2026 07:05 AM

குன்னூர்: குன்னுாரில் பலத்த காற்று வீசிய போது, பைக்கில் சென்றவர் மீது மரக்கிளை விழுந்ததால், அவர் படுகாயமடைந்தார். நீலகிரி மாவட்டம், குன்னுார் பகுதிகளில் கடந்த, 2 நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருவதுடன் பலத்த காற்றும் வீசி வருகிறது.
இந்நிலையில், நேற்று காலை குன்னுாரில் இருந்து கோத்தகிரி செல்லும் சாலையில் சிம்ஸ்பார்க் அருகே மரத்தின் பெரிய கிளை உடைந்து, அவ்வழியாக பைக்கில் சென்ற பைனான்சியர் முத்துசாமி என்பவர் மீது விழுந்ததில், அவர் பலத்த காயமடைந்தார். பைக்கும் சேதமடைந்தது. அவரை மீட்டு, 108 ஆம்புலன்சில், குன்னுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரிடம் இருந்த,60 ஆயிரத்து 640 ரூபாயை மீட்ட போலீசார், அவரது உறவினரிடம் ஒப்படைத்தனர்.
