எஸ். கைகாட்டியில் காட்டெருமை தாக்கி வாகனங்கள் சேதம்
எஸ். கைகாட்டியில் காட்டெருமை தாக்கி வாகனங்கள் சேதம்
ADDED : செப் 22, 2026 06:52 PM
கோத்தகிரி: கோத்தகிரி எஸ். கைகாட்டி பகுதியில், நிறுத்தி வைத்திருந்த வாகனங்களை காட்டெருமைகள் சேதம் படுத்தியதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோத்தகிரி சுற்றுவட்டார பகுதியில், சமீப காலமாக, காட்டெருமைகளில் நடமாட்டம் அதிகரித்துள்ளது. வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் காட்டெருமைகள், தேயிலை தோட்டங்கள் வழியாக, குடியிருப்பு பகுதிகளுக்கு வருவது வழக்கமாக உள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, கோத்தகிரி எஸ். கைகாட்டி பகுதியில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, கார், ‘பிக்–அப்’ மற்றும் இருசக்கர வாகனங்களை சேதப்படுத்தி உள்ளது. இதனால், வாகன உரிமையாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
குறிப்பிட்ட நேரத்தில், மக்கள் நடமாட்டம் இல்லாததால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. எனவே, பகுதி மக்கள் நலன் கருதி, காட்டெருமைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
