ADDED : செப் 22, 2026 07:02 PM
அ நிறம் | அளவு
குன்னுார்: குன்னுாரில் காட்டெருமை தாக்கியதில் தொழிலாளி படுகாயமடைந்தார்.
குன்னுார் அருகே வெலிங்டன் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார், 49. இவர் நேற்று முன்தினம் இரவு நல்லப்பன் தெரு அருகே, காட்டெருமையை விரட்ட முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது, ஆக்ரோஷமடைந்த காட்டெருமை, சிவக்குமாரை முட்டி தாக்கியதில் அவரது வலது வயிற்று பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. படுகாயமடைந்த அவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவ கல்லுார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. வனத்துறையினர், மருத்துவமனைக்கு நேரில் சென்று காயமடைந்த சிவக்குமாரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
