தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ வாகன நெரிசலுக்கு இடையே காட்டெருமைகள் 'வாக்கிங்'

வாகன நெரிசலுக்கு இடையே காட்டெருமைகள் 'வாக்கிங்'

வாகன நெரிசலுக்கு இடையே காட்டெருமைகள் 'வாக்கிங்'


ADDED : அக் 21, 2024 11:16 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 21, 2024 11:16 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குன்னுார் : 'அருவங்காடு பகுதியில் உலா வரும் காட்டெருமைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குன்னுார் அருகே அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் தேடி, காட்டெருமைகள் தினமும் வந்து செல்கின்றன. இந்நிலையில், ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் கால்நடைகள் சாதாரணமாக உலா வருவது போல, காட்டெருமையும் உலா வருகிறது.

'பீக் ஹவர்ஸ்' எனப்படும் காலை மற்றும் மாலை நேரங்களில் வாகன நெரிசலுக்கு இடையே, இந்த காட்டெருமைகள் சாலையை கடந்து செல்கின்றன. சில இளைஞர்கள் காட்டெருமைகளின் ஆபத்தை உணராமல், அருகில் நின்று 'செல்பி' எடுக்க முயற்சிக்கின்றனர்.

மக்கள் கூறுகையில், 'குடியிருப்பு வளாக பகுதிகளில் புற்களை மேய்ந்து, ஓய்வெடுக்கும் இந்தக் காட்டெருமைகள் காலை, 8:00 மணியளவில் பள்ளிக்கு மாணவ, மாணவியர் செல்லும் நேரத்தில், ஜெகதளா சாலையில் கடந்து செல்வதால் அனைவரும் அச்சத்துடன் காத்திருந்து அவைகள் சென்ற பிறகு பள்ளிக்கு செல்கின்றனர். இதனை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us