/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காரக்கொரை கிராமத்தில் பா.ஜ., பிரசாரம்
/
காரக்கொரை கிராமத்தில் பா.ஜ., பிரசாரம்
ADDED : நவ 05, 2025 08:52 PM

குன்னூர்: குன்னூர் ஜெகதளா அருகே காரக்கொரை கிராமத்தில், பா.ஜ., சார்பில் வீடு தோறும் பிரசார நிகழ்ச்சி நடந்தது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் ஜெகதளா பேரூராட்சி காரக்கொரை கிராமத்தில், வளர்ச்சி அடைந்த பாரதம், ஏழை எளிய மக்களுக்கு சேவை, 11 ஆண்டுகால நல்லாட்சி என்ற தலைப்பில், பா.ஜ., சார்பில் பிரசார நிகழ்ச்சி நடந்தது. பா.ஜ., பிரசார அணி ஜெயபிரகாஷ் தலைமை வகித்தார். செயலாளர் சந்திரசேகர், மாவட்ட ஆன்மீக பிரிவு துணைத் தலைவர் மோகன், செயலாளர் பாலகிருஷ்ணன், நலத்திட்ட பிரிவு மண்டல தலைவர் சந்தோஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஏழை எளிய மக்களுக்கு சேவை, விவசாயிகளின் நலன், பெண்களின் முன்னேற்றம், நடுத்தர மக்களின் வாழ்க்கை எளிதாக்குதல், சுகாதார பராமரிப்பு, வருங்கால தலைமுறையினருக்கான அதிகாரம் அளித்தல், தொழில் துவங்குவதை எளிதாக்குதல், தேசிய பாதுகாப்பு முன்னுரிமை, உலக பொருளாதாரத்தில் வல்லரசாகும் இந்தியா, முன்னேற்ற பாதையில் உள்கட்டமைப்பு ஆகியவை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

