/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மோடி வெற்றி பெற பா.ஜ., சிறப்பு பூஜை
/
மோடி வெற்றி பெற பா.ஜ., சிறப்பு பூஜை
ADDED : ஜன 21, 2024 10:52 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மஞ்சூர்;குந்தா மண்டல பா.ஜ.,வினர், குந்தா மண்டல தலைவர் ரமேஷ்ராஜன் பீமன் தலைமையில், லோக்சபா தேர்தலில் பா.ஜ., 400க்கும் மேற்பட்ட தொகுதிகளில் மாபெரும் வெற்றி பெற்று, பிரதமர் நரேந்திரமோடி 3-வது முறையாக பிரதமராகவும்,நீலகிரி தொகுதியில் மத்திய இணை அமைச்சர் முருகன் போட்டியிட்டு சுமார், 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறவும் அவினாசி சிவன் கோவிலில் சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தினர்.
மாவட்ட ஓ.பி.சி., தலைவர் சுரேஷ், மாவட்ட துணை தலைவர் பிரகாஷ், ஒன்றிய பொது செயலாளர் ராமகிருஷ்ணன், மகளிர் அணி மாவட்ட துணை தலைவர் சரஸ்வதி உட்பட நிர்வாகிகள் பலர் பூஜையில் பங்கேற்றனர்.