/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நடைபாதையில் கழிவு நீர் நகராட்சியை கண்டித்து கருப்பு கொடி
/
நடைபாதையில் கழிவு நீர் நகராட்சியை கண்டித்து கருப்பு கொடி
நடைபாதையில் கழிவு நீர் நகராட்சியை கண்டித்து கருப்பு கொடி
நடைபாதையில் கழிவு நீர் நகராட்சியை கண்டித்து கருப்பு கொடி
ADDED : நவ 21, 2025 06:03 AM

பந்தலுார்: நெல்லியாளம் நகராட்சி, 7-வது வார்டில், கால்வாய் வசதி ஏற்படுத்தி தராததை கண்டித்து கிராம மக்கள், கருப்பு கொடி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நெல்லியாளம் நகராட்சி, 7-வது வார்டில் எம்.ஜி.ஆர்., நகர் உள்ளது. இந்த பகுதியில் அதிகளவில் குடியிருப்புகள் உள்ள நிலையில், நகராட்சி சார்பில் நடைபாதை அமைக்கப்பட்டு உள்ளது.
ஆனால், அருகில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், மற்றும் மழைநீர் வழிந்தோட கால்வாய் வசதி இல்லை.
இதனால், கழிவுநீர் முழுவதும் நடைபாதையில் தேங்கி நின்று, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
இதிலிருந்து எழும் துர்நாற்றத்தால், வீடுகளில் குடியிருக்க முடியாத நிலையில் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த பகுதியில் அரசு நிலம் உள்ளதால், அதில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, கால்வாய் வசதி ஏற்படுத்தி தர, இப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தியும் தீர்வு கிடைக்கவில்லை. நொந்துபோன கிராம மக்கள், 'தேர்தல் நேரத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் ஓட்டு கேட்டு வரக்கூடாது,' என, எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி கட்டி கண்டன பேனர் வைத்துள்ளனர். இதனை அறிந்த அதிகாரிகள் பிரச்னை குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

