/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பைனான்ஸ் ஊழியர்களிடம் ஆயுதம் காட்டி மிரட்டிய இருவர் கைது
/
பைனான்ஸ் ஊழியர்களிடம் ஆயுதம் காட்டி மிரட்டிய இருவர் கைது
பைனான்ஸ் ஊழியர்களிடம் ஆயுதம் காட்டி மிரட்டிய இருவர் கைது
பைனான்ஸ் ஊழியர்களிடம் ஆயுதம் காட்டி மிரட்டிய இருவர் கைது
ADDED : நவ 21, 2025 06:04 AM

கூடலுார்: கூடலுார் அருகே, பைனான்ஸ் ஊழியர்களை ஆயுதம் காட்டி மிரட்டிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
கூடலுார் டி.கே., பேட்டை பகுதியில், கடன் தொகை செலுத்தாத, இரு சக்கர வாகனத்தை நேற்று முன்தினம், பைனான்ஸ் ஊழியர்கள் பறிமுதல் செய்ய வந்துள்ளனர். அப்போது கூடலுாரை சேர்ந்த நிஷார் அகமது, கலையரசன் ஆகியோர், அவர்களை கத்தியை காட்டி மிரட்டி தாக்க முயன்றனர்.
ரோந்து சென்ற போலீசார் அவர்களை பிடித்து, மிரட்ட பயன்படுத்திய கத்திகளை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, ஆயுத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, இருவரையும் கைது செய்தனர்.
போலீசார் கூறுகையில், 'ஆயுதம் காட்டி மிரட்டியது தொடர்பாக கைது செய்யப்பட்ட, நிஷார்அகமது மீது கஞ்சா உள்ளிட்ட, 10 வழக்குகளும், கலையரசன் மீது, 6 வழக்குகளும் நிலுவையில் உள்ளது.
கூடலுார் பகுதியில் கஞ்சா விற்பது மற்றும் இதுபோன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது போன்ற நபர்கள் குறித்த தகவல்களை பொதுமக்கள் போலீசுக்கு தெரிவிக்க வேண்டும்.
தகவல் தரும் நபர்கள் குறித்த விபரங்கள் ரகசியமாக வைக்கப்படும்,' என்றனர்.

