/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குன்னுார் அருகே கருஞ்சிறுத்தை நடமாட்டம்
/
குன்னுார் அருகே கருஞ்சிறுத்தை நடமாட்டம்
ADDED : ஆக 03, 2025 08:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னூர் : கோத்தகிரி, குன்னூர் பகுதிகளில் சிறுத்தையுடன் கருஞ்சிறுத்தையும் உலா வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
குன்னூரில் இருந்து அளக்கரை செல்லும் சாலையோர தேயிலைத் தோட்டத்தில், நேற்று பகல் நேரத்தில் கருஞ்சிறுத்தை உலா வந்ததை தொழிலாளர்கள் பார்த்துள்ளனர்.
காண்பதற்கு அரிதாக இருந்த கருஞ்சிறுத்தை. தற்போது அடிக்கடி பல இடங்களிலும் தென்படுகிறது. இவற்றை புகைப்படம் எடுக்க பலரும் இந்தப் பகுதிகளுக்கு வந்து செல்கின்றனர்.