/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அனாதீனம் நிலம் குறித்த கணக்கெடுப்பு; வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம்
/
அனாதீனம் நிலம் குறித்த கணக்கெடுப்பு; வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம்
அனாதீனம் நிலம் குறித்த கணக்கெடுப்பு; வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம்
அனாதீனம் நிலம் குறித்த கணக்கெடுப்பு; வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம்
ADDED : ஆக 03, 2025 08:26 PM
கூடலுார்; 'கூடலுாரில் அனாதீனம் நிலத்தில் வசிப்பவர்கள் குறித்த கணக்கெடுப்பு பணி மட்டும் நடக்கும் நிலையில், பட்டா வழங்குவதாக பரப்பும் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம்,' என, வருவாய் துறையினர் தெரிவித்தனர்.
'கூடலுாரில் அனாதீனம்; செக்சன்- 17 உள்ளிட்ட அரசு கைவசம் நிலங்களுக்கு, பட்டா வழங்க வேண்டும்,' என, பொதுமக்கள் அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். இவை ஒவ்வொரு தேர்தலின் போதும் அரசியல் கட்சயினரிடம் முக்கிய தேர்தல் வாக்குறுதியாகவும் உள்ளது. ஆனால், இதுவரை பிரச்னைக்கு தீர்வு கிடைக்கவில்லை.
இந்நிலையில், அனாதீனம் நிலம்; அதில் வசிப்பவர்கள் குறித்து கணக்கெடுக்கும் பணியில் வருவாய் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இதனை அறிந்த சிலர், சமூக வலைத்தளங்களில்,'அனாதீனம் நிலங்களுக்கு பட்டா வழங்கப்படுகிறது; நகராட்சி பகுதிகளில் இரண்டு சென்ட், ஊராட்சிகளில் மூன்று சென்ட் நிலத்துக்கு பட்டா வழங்கப்படுகிறது.
இதற்கான விண்ணப்பத்தை கிராம நிர்வாக அலுவலர் பெற்று கொள்கிறார். இதற்கான விண்ணப்பத்துடன், வீட்டு வரி ரசீது, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு ஆகியவை ஐந்து நகல்கள் எடுத்து; ஐந்து பாஸ்போர்ட் அளவு போட்டோக்கள் ஒட்டி கிராம நிர்வாக அலுவலரிடம் வழங்க வேண்டும்,' என, தகவல்களை பரப்பி வருகின்றனர்.
ஆனால், இது குறித்து அரசு துறையினர் எந்த தகவலும் வெளியிடாததால், மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
கூடலுார் தாசில்தார் முத்துமாரியிடம் கேட்டபோது,''இப்பகுதியில் அனாதீனம் நிலங்களில் வசிப்பவர்கள் குறித்து, கணக்கெடுப்பு பணிகள் மட்டுமே நடக்கிறது. கணக்கெடுப்பு பணியின் போது, ஆவணங்கள் கேட்பதாக கூறுவதும், பட்டா வழங்குவதாகவும் சிலர் கூறி வருவது உண்மைக்கு புறம்பானவை. இது போன்ற வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம்,'' என்றார்.