/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த கருங்குரங்கு
/
குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த கருங்குரங்கு
ADDED : ஜன 02, 2025 08:00 PM

பந்தலுார்; பந்தலுார் பஜார் மற்றும் சுற்றுவட்டார குடியிருப்பு பகுதிகளில், கடந்த சில மாதங்களாக கருங்குரங்கு ஒன்று உலா வருவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
பந்தலுார் பஜார் மற்றும் சுற்று வட்டார கிராம பகுதிகளில், கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கருங்குரங்கு ஒன்று முகாமிட்டு உள்ளது. குடியிருப்பு பகுதிகள் மற்றும் கடைகள் மீது ஏறி, குதித்து சாலையில் நடந்து செல்லும் மக்கள் மற்றும் குழந்தைகளை மிரட்டும் வகையில் துரத்துகிறது. அடிக்கடி குதித்து ஓடுவதால் குடியிருப்புகள் மற்றும் கடைகளின் மேற்கூரைகள் சேதமடைந்து வருகின்றன. கடைகளில் உள்ள பழங்களை எடுத்து ருசித்து செல்லும் இந்த குரங்கால் மக்கள் மற்றும் மாணவர்கள் அச்சத்துடன் நடமாட வேண்டிய நிலை உள்ளது.
பொது மக்கள் கூறுகையில், ' பஜாரில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் வந்து உணவு பொருட்களை ருசிக்கும் இந்த குரங்கு வனப்பகுதிக்குள் செல்லாது என்பதால், இப்பகுதியில் வனத்துறை ஆய்வு செய்ய வேண்டும். மனிதர்களை கடித்து குதறும் முன்பாக வனத்துறையினர் கூண்டு வைத்து, இந்த கருங்குரங்கை பிடித்து முதுமலையில் விட வேண்டும்,' என்றனர்.