/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நீலகிரி வாகனங்கள் வரும் வழியில் தடை; தாமதம் ஏற்படுவதால் ஓட்டுனா்கள் அதிருப்த।ி
/
நீலகிரி வாகனங்கள் வரும் வழியில் தடை; தாமதம் ஏற்படுவதால் ஓட்டுனா்கள் அதிருப்த।ி
நீலகிரி வாகனங்கள் வரும் வழியில் தடை; தாமதம் ஏற்படுவதால் ஓட்டுனா்கள் அதிருப்த।ி
நீலகிரி வாகனங்கள் வரும் வழியில் தடை; தாமதம் ஏற்படுவதால் ஓட்டுனா்கள் அதிருப்த।ி
ADDED : அக் 07, 2024 11:53 PM

குன்னுார் : குன்னுார் மலை பாதையில் கல்லார் சோதனை சாவடியில், நீலகிரி வாகனங்கள் செல்லும் வழி மூடப்பட்டு, வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஊட்டி உட்பட கோடை வாசஸ்தலங்களில் சீசன் காலங்களில், அதிக எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் வருகையால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க ஐகோர்ட் உத்தரவின் பேரில் கடந்த மே, 7ம் தேதியில் இருந்து சீசன் முடியும் வரை இ-பாஸ் நடைமுறைபடுத்தப்பட்டது.
தொடர்ந்து, மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில், இ--பாஸ் நடைமுறை தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக, குன்னுார் மலைப்பாதை வழியாக வரும் வாகனங்களுக்கு கல்லாறு சோதனை சாவடியில் இ-பாஸ் சோதனை செய்து அனுமதிக்கப்பட்டு வருகிறது.
நீலகிரி வாகனங்களுக்கு விலக்கு
அதில், நீலகிரி வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால், டி.என்.,- 43 வாகனங்கள் செல்ல தனி வழி ஏற்படுத்தப்பட்டது. இந்த வழியாக நீலகிரி வாகனங்கள் வந்தன. இந்நிலையில், சமீபத்தில் இந்த பாதை மூடப்பட்டு, இ--பாஸ் வாகனங்கள் செல்லும் நுழைவு வழியில், உள்ளூர் வாகனங்களும் செல்ல நிர்பந்திக்கப்படுகிறது. விடுமுறை தினங்களில் கடும் வாகன நெரிசல் இருந்த போதும், டி.என்.,-43 நுழைவு வழி திறக்கப்படாமல், இ-பாஸ் சோதனை செய்யும் வழியில் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.
கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், இ--பாஸ் நுழைவு வாகனங்கள் செல்லும் வழியில், நீலகிரி உள்ளூர் வாகனங்களும் நிறுத்தி வைத்து அனுப்பி வருகின்றனர்.
இதனால், நெரிசல் அதிகரித்ததுடன் உள்ளூர் மக்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். ஏற்கனவே, விரிவாக்க பணிகளால், கடும் போக்கு வரத்து நெரிசலில் சிக்கி தாமதமாகும் நிலையில், சோதனை சாவடியிலும் தாமதம் ஏற்படுத்துகின்றனர்.
பசுமை வரி
பசுமை வரி பெயரில் இங்கு வாகனங்களுக்கு, 30 ரூபாய் வசூலிக்கும் நிலையில் பெரும்பாலான வாகனங்களுக்கு அதற்குரிய கட்டண சீட்டு கொடுப்பதில்லை. காவல் துறையினரும் அங்கு உள்ளதால், இ--பாஸ் கட்டணம் என நினைத்து பல சுற்றுலா பயணிகளும் கொடுத்து ஏமாற்றமடைகின்றனர். இது குறித்து வருவாய் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.