'நீலப் புலி' வண்ணத்துப்பூச்சிகள்: மாணவர்களுக்கு விழிப்புணர்வு அவசியம்
'நீலப் புலி' வண்ணத்துப்பூச்சிகள்: மாணவர்களுக்கு விழிப்புணர்வு அவசியம்
UPDATED : நவ 02, 2026 05:14 PM
ADDED : நவ 02, 2026 05:04 PM

கூடலுார்:'கூடலுார் சுற்றுவட்டார பகுதிகளில் பறந்து செல்லும் 'நீலப்புலி' வண்ணத்துப் பூச்சிகள் குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,' என, வலியுறுத்தியுள்ளனர்.
'நிலப்புலி' என்று அழைக்கப்படும் வண்ணத்துப் பூச்சிகள் கோவை, மேட்டுப்பாளையம், நீலகிரி மலைப்பகுதிகளில் சீசன் காலத்தில் கூட்டமாக காணப்படும். தற்போது, கூடலுார், பந்தலுார் சுற்றுப்புற பகுதகிளில், 'நீலப்புலி' என்று அழைக்கப்படும் வண்ணத்துப்பூச்சிகள், கூடலுார், பந்தலுார் பகுதியில் பரவலாக பறந்து செல்கிறது. இவைகளை உள்ளூர் மக்கள், சுற்றுலா பயணிகள் ரசித்து படமெடுத்து மகிழ்கின்றனர்.
இயற்கை அலுவலர் சிவதாஸ் கூறுகையில், ''நீலப்புலி, என்பதை 'குளோசி புலி' வண்ணத்துப்பூச்சிகள் என பெயர் மாற்றம் செய்துள்ளனர். தற்போது இப்பகுதியில் அதிக அளவில் இவ்வகை வண்ணத்துப்பூச்சிகள் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இயற்கை பாதுகாப்பதில், இயற்கையாகவே உதவி வரும் வண்ணத்துப்பூச்சிகளின் முக்கியத்துவம் குறித்து, வனத்துறையினர் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,'' என்றார்.
